தொழில் முனைவோர் கூட்டமைப்பு

தையல் ஆடை குழுமம்

வேட்டி, புடவை அல்லது துண்டு போன்ற உடைகளைத் தயாரிக்கும் கலை, நெசவுக்கலை. பருத்தியிலிருந்து தக்ளி மற்றும் ராட்டையின் மூலம் நூல் நூற்றலையும், கைத்தறியையும், தையலையும் பண்டைக்காலம் தொட்டே தமிழர் அறிந்திருந்தனர். தமிழர்கள் இத்துறையில் கொண்ட தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் தமிழர் நெசவுக்கலை குறிக்கின்றது. தட்ப வெப்ப நிலைகள் உடம்பைத் தாக்காத வண்ணம் ஆடை பாதுகாத்து வந்தது.

நமது கலைச் சிறப்பையும் நுண்ணறிவையும் காட்டி வந்தது. ”ஆடையுடையான் அவைக் கஞ்சான்” ”ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்ற முதுமொழிகள் பல தோன்றின. முற்காலத்தில், மக்களின் ஆடை அதை அணியும் முறை ஆகியவற்றைக் கொண்டே அவர்களின் தகுதி நிர்ணயிக்கப்பட்டது. இதனை தைக்கும் முறையை வடிவமைப்புகள் ஆகியன கிராம புறத்தில் ஊக்கப்படுத்தி பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உடன் நெசவு தொழிலை தையல் ஆடை குழுமம் மூலமாக மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்..

ஆடையகம்

பட்டு நெசவுத் தொழில் கச்சாப் பொருட்களின் விலை ஏற்றத்தாலும், மூலப் பொருட்களின் தட்டுப்பாட்டாலும், இணையதள வணிகச் சூதாட்டங்களாலும், கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி, மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது. பங்குச்சந்தை வணிகர்கள், பட்டு மூலப்பொருட்களைப் பதுக்கி, கொள்ளை இலாபத்துக்கு விற்கிற நிலைமை ஏற்பட்டு உள்ளது.

பட்டுச் சேலை தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் சரிகை விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால், பட்டுச் சேலை உற்பத்தியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களிலும், விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், வேலையின்றி தவிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது. ஆடையகம் மூலம் இதனை மீட்டெடுக்க வேண்டும்..

தையல் பயிற்சி மையம்

ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க ஓர் இடம் ஆகியவைதான் அத்தியாவசியத் தேவைகள். இதில், இரண்டாவது இடத்தைப் பெறுவது உடை. இந்த உடை என்பது தேவைக்கு மட்டுமின்றி நம் தோற்றத்தை உயர்த்திக் காட்டவும் செய்கிறது. எனவேதான் ஆள் பாதி, ஆடை பாதி என நம் முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்.

இன்றைய நவநாகரிக உலகில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே என பல்வேறு வடிவங்களில் உடைகள் தயாரிக்கப்படுகின்றன.அன்றைய காலங்களில் பண்டிகை, திருவிழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் மட்டுமே புத்தாடை என்பது தேவைப்பட்டது. ஆனால், இன்றைய காலத்தில் சுபநிகழ்ச்சிகள் மட்டுமல்லாது அன்பளிப்பு, தள்ளுபடி காலங்கள், சீருடைகள், வேலைக்குச் செல்ல என்பதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஆடைகளின் தேவையும் விற்பனையும் அதிகரித்து வருகின்றன.

எனவே, ஆடைகளின் தேவையை மையமாக வைத்து அது சார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால் நல்லதொரு வருமானத்தை ஈட்ட முடியும்..‘வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் இன்றைக்கு அனைத்து துறைகளில் இருக்கும் பெண்களுக்கும் தையல் பயிற்சி என்பது அவசியமாகியுள்ளது. அதனால் அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களும் இன்றைக்கு தையல் கற்று வருகின்றனர். ஆடைகளை உற்பத்தி செய்ய ஜவுளி ஆலைகள் அமைப்பதற்கோ, ஆடையகங்கள் அமைப்பதற்கோ பெரிய அளவிலான முதலீடு தேவைப்படும். ஆனால், தையல் தொழிலை தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவையில்லை. முறையாகக் கற்றுக்கொண்டு சிறிய முதலீட்டில் துவங்கி படிப்படியாக வளர்ச்சி பெறலாம். அப்போது துதான் முதல் தலைமுறை பெண் தொழில் முனைவோர்கள் உருவாக்க முடியும்.

அரவை ஆலை

மிளகாய் துாள், பூரி, சப்பாத்தி மாவு என, ரெடிமேடாக பாக்கெட்டுகளில் வந்த பின், மாவு அரைக்க வரும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது அதனை நடைமுறைப்படுத்தி வேலைவாய்ப்பு பெருக்குவது மட்டுமல்லாமல் நமது பாரம்பரிய முறைப்படி இயற்கையான முறையில் எவ்வித ரசாயனம் கலக்காமல் அடுத்த தலைமுறையும் சிறந்த விசமற்ற உணவுகள் தாயரிக்கவும் உண்ணவும் வழிவகுக்கும்..

குழம்பு மிளகாய் துாள், தனி மிளகாய் துாள், மல்லி துாள் என கூறப்படும் தனியா துாள், பூரி, சப்பாத்தி மாவு என அவர்களுக்கு தேவையானவை அவர்கள் உற்பத்தி செய்யும் தற்சார்பு வாழ்வியலை மீட்டெடுக்கும்

பாரம்பரிய மிட்டாய் கடை

தேன்மிட்டாய், கமர்கட், கயிறு மிட்டாய், எள்ளுரண்டை, கடலை மிட்டாய், கொக்கொ மிட்டாய், மாங்காய் போன்றவற்றை தயாரிப்பு செய்ய வேண்டும்..கடலை உருண்டை, முந்திரி உருண்டை, பாதாம் உருண்டை, எள்ளு உருண்டை, பாசிப்பயிறு உருண்டை, ஆகிய அனைத்தும் கிடைக்கிறது. தினமும் ஒரு வைகை உருண்டையை குழந்தைகளின் திண்பண்டங்களாக கொடுக்கலாம். வெல்லம் மற்றும் கருப்பட்டி சேர்த்து செய்வதால் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது

இது மட்டுமல்ல "நவதானிய குக்கீஸ்கள்", " சிறுதானிய குக்கீஸ்கள்" "நவதானிய ரஸ்க்குகள்", "சத்தான எள்ளு மிட்டாய்", மொறுப்பான "சாத்தூர் சேவு", தித்திக்கும் "ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா", "திருநெல்வேலி அல்வா", "மலைவாழைப்பழம்", "ஆட்டுக்கால் கிழங்கு", "ஊட்டிஹோம் மேட் சாக்லேட்ஸ்", "ஆர்கானிக் சூப்" "வற்றல் வகைகள்" "ரெடிமிக்ஸ் சமையல் பொடிகள்" "மூலிகை பொடிகள்","நன்னாரி சர்பத்"என 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் மீட்டெடுக்க வேண்டும்..

மரச்செக்கு எண்ணெய் உற்பத்தியாளர்

செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை(Groundnut), தேங்காய்(Coconut), எள்ளு (Sesame), ஆமணக்கு(Castor)) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது மரத்தாலோ(Tree), கல்லாலோ(Stone) செய்யப்பட்டிருக்கும். செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்கப் படுகிறது. ஆரம்பக் காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளைப் பயன்படுத்தி வந்தனர் தற்பொழுது மின்சாரம் அல்லது எரிப்பொருள் மூலம் இயக்கப்படுகிறது.

இயந்திரத் தயாரிப்பில் எண்ணெய் வித்துப் பொருட்களில் உள்ள சத்துகளையும், தயாரிப்பாளர்கள் வடிகட்டி விடுவர். இதனால், பாக்கெட் எண்ணெய், பார்க்க பளிச்சென இருக்கும். கம்பெனிகள், தங்களுக்கு என நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கின்றனர். அதனால் தான் இந்த எண்ணெய் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை மட்டுமே தாக்கு பிடிக்கிறது

மரசெக்கு எண்ணெய் பார்ப்பதற்குக் கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும். ஆனால் நல்ல ருசியுடன் ஒரு வருடக் காலத்திற்குக் கெட்டு போகாமலும் இருக்கும். ஒரு முறை மரசெக்கு எண்ணெய் சாப்பிட்டால் அதன் ருசி காலக் காலத்திற்கும் மறக்காது. இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்

மரசெக்கு எண்ணெய் – பயன்கள்
இதயத்தை வலிமை ஆக்கும்
சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது
உடல் பருமன் சீராக உதவும்
உயர் ரத்த அழுத்த கோளாறுகள் சரி ஆகும்
குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

பனை பொருள் உற்பத்தி மையம்

ஓலை குடுசை, - அதற்க்கு தேவையான அனைத்து பொருள்களும் பனை மரத்தில் இருந்தே பெறப்படுகிறது. அவை:
ஓலை , பட்டை , மரம் , அவினி ,குழந்தைகளுக்கு விளையாட கைல் தரக்கூடிய கிளுகிளுப்பை என்று சொல்லக்கூடிய விளையாட்டு பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.மற்றும் காத்தாடி, போன்ற விளையாட்டு பொருளும் செய்து விளையாடினார்கள். பச்சை ஓலைகள் ஆடு,மாடுகளுக்கு வறட்சி காலங்களில் உணவாகவும் பயன்பட்டது.

பாளை - பதனீர் ( தெலுவு, கள், சுண்ணாம்பு தெலுவு ) - இதிலிருந்து உருவாகும் பொருள்கள் அதிகம் அவை:
கருப்பட்டி, பனை கற்கண்டு, பனை வெல்லம், சாராயம்,சுக்கு கருப்பட்டி, கருப்பட்டி காபி மாற்றம் டீ கருதாம் பாளை - இது ஆண் பனை மரத்திலிருந்து பெறக்கூடியவை. இதை கொண்டு கிராமப்புறங்களில் பொங்கல் திருவிழா கொண்டாடும் பொழுதும், கார்த்திகை கூம்பு விழா கொண்டாடும் பொழுதும் இதை பாதி அளவு மட்டும் எரித்து அதை எடுத்து தகுந்த முறையில் தயார் செய்து பொரிப்பந்தம் தயார்செய்து விளையாடுவார்கள் அது பார்ப்பதற்கு இப்போது நம் தீபாவளியில் கொழுத்தி விளையாடுகிற மத்தாப்பூ போன்றே இருக்கும்.

பனம் பட்டை
இதிலிருந்தே குடுசைகள் கட்ட பயன்படும் அவினி தயாரிக்கப்படுகிறது பனை படையில் இருந்து சிறு சிறு கயிறுகள் போல உரித்து எடுக்கப்படுகிறது அதுவே அவினி, இதுவே குடுசை போன்றவற்றை கட்டும்பொழுது கயிறாக பயன்பட்டது. இதேபோல் சிறு சிறு பாகங்களாக பிரிக்காமல் ஒரு பட்டையை முழுவதுமாக ஒரே முறைகள் பிரித்து எடுத்தால் அதுதான் உரியான் பட்டை என்று சொல்வார்கள். உரியன் பட்டை - இது முறம்,கூடைகள்,போன்ற அணைத்து வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்க பயன்படுகிறது. பன்னாடை - இது கிராம புறங்களில் அடுப்பை விரைவாக பற்றவைக்க பயன்பட்டது, அது மட்டுமின்றி பதனீரை மரத்திலிருந்து இருக்கும்பொழுது அதில் இருக்கும் தூசு, குப்பைகளை வடிகட்ட இந்த பன்னாடையே வடிகட்டியாக பயன்பட்டது

பட்டைகள் ஓரங்களில் இருக்கும் கருக்கு (கருக்கான் பட்டை ), இது பனை பட்டையின் இரு புறங்களிலும் இருக்கும். இதை கொண்டு நுங்கு, சிறிய குச்சிகள், சைதை பற்று கொண்ட அனைத்தையும் அறுக்கலாம் இதுவே இப்போது நம் பயன்படுத்துகிற ரம்பம் போல் செயல்பட்டது. திடுப்பு - பனை பட்டை தகுந்த முறையில் வெட்டியெடுத்து அதை கரண்டியாக பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள் அதற்க்கு பெர்தான் திடுப்பு.

நுங்கு - பனை பழம்- சீம்பு கொட்டை - ஊமான் கொட்டை -பனை கிழங்கு அதன் பிறகு திரும்ப புதிய பனை மரம் முளைத்து வரும். நுங்கு - மிகசிறந்த குளிர்ச்சி தரக்கூடிய உணவு பொருளாகும். இதிலும் சிறுவர்கள் நுங்கு வண்டி செய்து விளையாடுவார்கள். பனை பழம் - பழங்களில் சுட்டு சாப்பிடக்கூடிய பழம் நம் பனை மரம் பழம் மட்டுமே. ஆனால் பனை பழத்தை அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம்.இது மட்டும் இல்லாமல் வேகவைத்தும் சாப்பிடலாம் அதுதான் சேவாய்ப்பழம்- இதை பனம் பழம் திரண்ட நிலையில் வெட்டி எடுத்து சிறு சிறு துண்டுகளாக சீவி தகுந்த அளவு தண்ணீரை ஊற்றி வேகவைத்து சாப்பிடுவார்கள்.நன்றாக பழுத்த பலத்தை தோல் எடுத்துவிட்டு அதில் இருக்கும் சதைப்பகுதியை ஆடு,மாடு போன்ற கால்நடைகள் குடிக்கும் தண்ணீரில் அதை கரைத்துவிட்டு வெயில் காலங்களில் சிறந்ததாக பயன்படுத்தப்பட்டது .

சீம்பு கொட்டை - இவை பனம்பழத்தை மண்ணில் புதைத்து வைத்து சில நாள்கள் கழித்து பார்த்தால் அதில் சிறிய அளவில் முளைப்பு அதாவது பனை மரம் வளர்வதற்கான ஆரம்ப நிலை அதுவே ஆகும் அந்த கொட்டையை வெட்டி பார்த்தல் அதினுள் வெள்ளை நிறத்தில் சீம்பு இருக்கும் அதுவும் சாப்பிட மிகவும் ஏற்றது இனிப்பாக அருமையான சுவையுடன் இருக்கும்.

பனை மரம் முழுவதுமே-அதன் பாகங்கள் எல்லாமே, காய்ந்த பிறகு விரவாக அடுப்பு எரிப்பதற்காக, சமைப்பதற்கு பயன் படுகிறது. இத்தனை பயன் தரக்கூடிய பனை மர கொட்டைகள் (விதைகள் ) சுண்ணாம்பு சூளைகளுக்கு விரவாக மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இதனால் பனை அழிவில் இருந்து மீட்டெடுக்க முடியும்

திடக்கழிவு மேலாண்மை மையம்

திடக்கழிவு மேலாண்மை என்பது வீடுகள்,வணிக வளாகங்கள்,தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் தேவையில்லாத பயன்படுத்தப்பட்ட திடப் பொருள்களை சரியான முறையில் நிர்வகிக்கும் செயலாகும். இவை சுற்றுச்சூல் மாசுபடுத்துகின்றன.உதாரணமாக பேப்பர் , ரப்பர் , பிளாஸ்டிக் பொருட்கள் , கண்ணாடிகள் , தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகள் போன்றவையாகும்.

சேகரித்தல் :
திடக்கழிவானது வாகனங்களால் சேகரித்து சுத்திகரிக்கும் இடத்திற்கு எடுத்து வரப்படுகிறது .

பிரித்தல் :
திடக்கழிவுகளை சிதைவன , சிதையாதவை , எரியும் பொருட்கள் , எரியாத பொருட்கள் எனத் தனியாக பிரிக்கப்பட்டு பிளாஸ்டிக் பேப்பர் ,உலோகம் போன்றவை மறுசுழற்சிக்கு அனுப்பப்டுகிறது .

தூளாக்குதல் :
திடக்கழிவுகளை அரைத்துத் தூளாக்கப்படுகிறது . பின்பு சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது .

திடக்கழிவு மேலாண்மையின் பயன்பாடு :
i) மக்களை நோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறது .
ii) மறுசுழற்சி செய்வதன் மூலம் சக்தி எடுக்கப்படுகிறது .
iii) சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பயன்படுகிறது

மருத்துவ மையம்

காய்ச்சல், சளி தொடங்கி எந்த உடல் பிரச்சினை என்றாலும் மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை எடுத்து நம் உடலை இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறோம். நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கியப் பயன்களில் ஒன்று மருத்துவம். அதேநேரம் அலோபதி எனும் ஆங்கில மருத்துவர்களே இன்றைக்கு இந்தியாவில் அதிகம் இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு நமது மரபு மருத்துவ முறைகளே நம் நாட்டு மக்களின் உடல்நலனைப் பேணிக் காத்து வந்தன. இன்றைக்கும் அந்த மருத்துவ முறைகள் சிறந்த பலனை அளித்து மக்களைக் காத்துவருகின்றன.

இலை, தழைகளே முக்கிய மருந்து மூலப்பொருட்கள். தாவரங்களுடைய வேதிப்பண்புகளின் அடிப்படையிலும் சுவைத் தத்துவத்தின் அடிப்படையிலும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

அத்துடன் கனிமங்கள், உயிரினங்களிடமிருந்து பெறப்படும் பொருட்களைக் கொண்டும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. சித்த மருத்துவத்தில் உலோக மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், அவை மனித உடலுக்கு உகந்தவை அல்ல என்றும் பரவலான நம்பிக்கை உள்ளது. இது ஒரு மூடநம்பிக்கை. சித்த மருத்துவத்தை மேற்கொண்டு வந்த பரம்பரைச் சித்த வைத்தியர்கள் மூலமாக இந்த மருத்துவ முறை முன்பு பரவலாக இருந்தது. தற்போது சித்த மருத்துவம் தனி மருத்துவப் படிப்பாகக் கற்பிக்கப்படுகிறது. இதனால் நமது மருத்துவ கலை அழியாமல் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க முடியும்..

சத்துமாவு

ஆரோக்கியமான சத்துமாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் குழந்தைக்கான உணவில் பெற்றோர் எப்போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல், அவை குழந்தைகளுக்கு உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு கொடுக்கும் நீர் கூட சுத்தமானதாக இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கென பதப்படுத்தப்பட்ட சத்து மாவுகளை தயாரிப்பு செய்ய வேண்டும்.

இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது இதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் வளர்ச்சி அதிகரிக்கும்.