நாட்டுக்கோழி வளர்ப்பு கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகளுக்கு நாட்டுக்கோழிகள் நடமாடும் வங்கிகளாக செயல்பட்டு குடும்ப வருமானத்தை உயர்த்துவது மட்டுமின்றி அவர்களின் குடும்பத்துக்கு தேவையான புரதத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. மேலும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டவும் சிறந்த சுய வேலை வாய்ப்பு தொழிலாகவும் உள்ளது. கறிக்கோழியின் விலையை விட நாட்டுக்கோழி இறைச்சியின் விலை அதிகமாக இருந்த போதிலும் நாட்டுக்கோழி இறைச்சி உண்ணும் பழக்கம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. குறைந்த கொழுப்பு சத்து உள்ள ருசியான இறைச்சியே இதற்க்கு காரணம்.
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழி வளர்ப்பு கிராம மக்களின் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதப்படுகிறது. நாட்டுக்கோழிகள் எவ்வகையான சூழ்நிலையிலும் வளரக்கூடிய திறன் கொண்டவை. நம்நாட்டில் ஏறத்தாழ 20 க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி இனங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் அவற்றின் மூதாதையரான செந்நிற நாட்டுக்கோழிகள் வம்சாவளி வந்தவை. நாட்டுக்கோழிகளில் அசீல், சிட்டகாங், பஸ்ரா, நிக்கோபாரி, கடக்நாத், கிராப் கோழிகள், சில்பா கோழிகள், குருவு கோழிகள் மற்றும் பெருஞ்சாதி கோழிகள் இந்தியாவில் பெரும்பாலும் காணப்படுகின்றன.
நீங்கள் சாப்பிடும் முட்டையில்" மஞ்சள் கருவிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் , அது ஆரோக்கியமான கோழியிலிருந்து வந்ததா இல்லை பிராய்லர் கோழியிடமிருந்து வந்ததா என. முட்டை நல்லது என சிறு வயதிலிருந்தே நமக்கு சொல்லிக் கொடுத்தாலும் அதிலேயும் கலப்படம், ஹார்மோன் ஊசி என மண்ணை அள்ளிப் போட்டுவிட்டனர் இன்றைய வணிகஸ்தர்கள். ஆரோக்கியத்தையும் எப்போது வணிகம் செய்ய ஆரம்பித்தனரோ அப்போதிருந்து ஆரம்பித்துவிட்டது நமது ஆரோக்கியத்திற்காக கேடு காலம். சாப்பிடும் அரிசியிலிருந்து குடிக்கும் நீர் வரை எல்லாவற்றிலும் ஆபத்து என்றால் எதைத்தான் பின் சாப்பிடுவது என நமக்கு பலக் கவலைகள் சூழ்கின்றன
ஏழைக் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை என பள்ளியில் வழங்கப்பட்டதற்கு காரணமே அதன் சத்துக்கள் வளரும் பிள்ளைகளுக்கு சேர வேண்டும் என்பதால்தான். ஆனால் அந்த முட்டைகள் இன்று வெறும் விஷமாகி மாறிப் போகின்றது என்றால் அது எத்தனை துயரமானது. முட்டை எங்கிருந்து பெறப்படுகிறதென்றால் கோழி. அந்த கோழி ஆரோக்கியமானதா என்று கேட்டால் இல்லை.. ஏனென்றால் ப்ராய்லர் கோழிகளை வளர்க்க விட்டு ஸ்டீராய்டு ஊசி மூலம் முட்டைகளைப் பெறச் செய்து அதனை மிகப்பெரிய வணிகமாகிவிட்டோம். நாட்டு கோழி வளர்ப்பில் நாட்டு கோழி முட்டை மற்றும் ஒரு வணிக வாய்ப்பை உருவாக்கிறது
மீன் வளர்ப்பு பயிர் விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்புடன் சேர்த்து செய்யப்படுகிறது. இவ்வாறு ஒருங்கிணைத்துச் செய்யும்போது வளங்கள் நன்கு பயன்படுத்தப்படுவதோடு, இருக்கும் குறைந்த அளவு நிலத்தில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும். தற்போது அதிகரித்து வரும் மீன் பொருட்களின் விலையினாலும், பயிர்களுக்கு இடும் உரம் அதிக விலையாக இருப்பதாலும் நெல் போன்ற பயிர்களின் வயலில் மீன் வளர்ப்பது பற்றிவிழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்குக் குறைந்த செலவில் நல்ல மீன் புரதங்கள் எளிதில் கிடைக்கின்றது. அதோடு வயலிற்கு எருவாக மீன்களின் கழிவுகள் பயன்படுகின்றன.
பண்ணை (வயலின்) குளங்களில் மீன் வளர்க்கலாம். அதேபோல் கரை ஓரங்களில் வாத்துக்களை மேய விடலாம். வயல் ஓரங்களில் காய்கறி மற்றும் பழ மரங்களை விதைக்கலாம். இதனால் நமக்கு முட்டை, இறைச்சி, உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன் போன்றவை கிடைக்கும். இதனால் நல்ல சரிவிகித உணவு கிடைப்பதோடு பொருளாதார அளவிலும் அதிக இலாபம் ஈட்ட முடிகிறது.
குளங்களில் வாத்து வளர்த்தல், பயிர்கழிவுகளை கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துதல், மேலும் கால்நடை கழிவுகளை பயிர்களுக்கு உரமாக்குதல் போன்ற சுழற்சி முறைப் பயன்பாடே ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பாகும். இது சிறந்த வேலைவாய்ப்பை அளிப்பதுடன், கிராமப்புற வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.
'கோழிகளுக்கு சமச்சீரான அளவில் தீவனம் கொடுக்கும்போதுதான், அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். சொந்தமாக தீவனம் தயாரிக்கும்போது... செலவு குறைவதோடு, தரமான பொருட்களைத் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனால், கோழிகளுக்கு தேவையான தீவனங்களை தற்சார்பாக தயாரித்துக் கொள்ள முடியும். 100 கிலோ வரை தீவனம் தயாரிக்க, இதில் சில மூலப்பொருட்கள் சேர்க்கப்பட வேண்டும் . அந்த அட்டவணையைப் படித்தவுடன், பலருக்கும் தாது உப்புக்கலவை, வைட்டமின் கலவை எங்கு கிடைக்கும் என்று சந்தேகம் ஏற்படலாம். இவையெல்லாம் கால்நடை மருந்துகள் விற்பனை செய்யப்படும் கடைகளில் கிடைக்கும். இந்த மூலப்பொருட்களைத் தீவன அரவை இயந்திரம் மூலம் அரைத்து, கோழிகளுக்குக் கொடுக்கலாம்.
கால்நடை மருத்துவம் என்பது நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை வேளாண்மையுடனும், கால்நடைகளுடனும், பின்னிப் பிணைந்துள்ளன. அவர்கள் தமக்கு இணையாகவும் சிலர் தம்மை விட மேலாகவும் கால்நடைகளை மதிக்கின்றனர். கால்நடைகள் என்பது கிராமப்புற மக்களிடையே ஒரு முக்கியமான அங்கமாகும்.மக்களின் வாழ்வில் மருத்துவம் என்பது ஒரு முக்கியமான ஒன்றோ அதேபோல் கால்நடைகளுக்கும் மருத்துவம் முக்கியமான ஒன்றாகும்
மாட்டு மருத்துவம் விலங்குகளின் நோய்களுக்குக் சிசிச்சை அளிப்பதும் பரம்பரை மருத்துவ முறைகளுள் ஒன்றாக உள்ளது. மாடுகளுக்கு ஏற்படும் எலும்பு முறிவுச் சிகிச்சை, வெப்பு நோய், குடல் நோய், புண்கள், கோமாரி நோய், ஆகிய நோய்களுக்குச் சிகிச்சை செய்பவர்கள் மாட்டு மருத்துவர்கள் என்றும் வைத்தியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்நோய்களுக்கு மூலிகை மருத்துவ முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
வெள்ளாடு வளர்ப்பு
நம் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்றவர்களின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவதில் வெள்ளாடு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஊரகப்பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான மக்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாக உள்ளது. மிகவும் வளம் குன்றிய பகுதிகளில் உள்ள மோசமான சூழ்நிலையில் வளரும் செடிகள் மற்றும் மரங்களை கொண்டு ஆடுகளை வளர்க்கலாம். இந்தியாவில் உள்ள மேய்ச்சல் மற்றும் வேளாண் சங்கங்கள், வெள்ளாடுகள் கூடுதல் வருமானம் தரக்கூடிய ஆதாரமாகவும், பேரழிவுகளுக்கு எதிராக காப்பீடு செய்யவும் முடியும் ஒரு ஆதாரமாக இருக்கிறது என்று கூறியுள்ளது. திருவிழாக் காலங்களில் கடவுள் முன், பலி கொடுக்க ஆடுகள் பயன்படுத்தப் படுகின்றன. மேலும், வெள்ளாடுகள் பலசமூகங்களில் மத ரீதியாக மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
வெள்ளாடுகள் வளர்ப்பிற்கான நன்மைகள்
வெள்ளாடு வளாப்புக்கு ஆரம்ப முதலீடு மிகவும் குறைவு.
சிறிய உடலமைப்பு, மந்தமான இயல்பு கொண்டவையால், கொட்டில் அமைக்க தேவைப்படுகிறவையும், பராமரிக்கும் சிக்கல்களும் குறைவு.
வெள்ளாடுகள் மக்களுடன் நண்பனாக உள்ள விலங்காக இருக்கிறது.
வெள்ளாடுகள் தன் இனங்களை விரைவில் இன விருத்தி செய்யக் கூடியவை. வெள்ளாடுகளின் தாய்மைக் காலம் 10-12 மாதத்தில் தொடங்கி, 16-17 மாதங்களில் பால் தர தயாராகின்றன.
வறட்சி நிலவும் பகுதிகளில், வெள்ளாடு வளர்ப்பு என்பது பிரச்னைகள் குறைவான ஒரு பண்ணைசார் தொழிலாக விளங்குகிறது.
வணிக ரீதியாக உள்ள பண்ணைகளில், ஆண் மற்றும் பெண் ஆடுகள் இரண்டும் சரிசம மதிப்பு கொண்டவை. பல தரப்பட்ட புற்களை மேய வெள்ளாடுகள் தான் மிகவும் ஏற்றது. இவை பலதரப்பட்ட முட்களுடைய புதர்ச் செடிகள், களைகள், பயிர்க் குப்பைகள், மனித உணவிற்கும் போக உள்ள வேளாண் உபரி பொருட்கள் போன்றவைகளை உண்டே உயிர் வாழக் கூடியவை. சரியான பராமரிப்பு கொண்ட பண்ணைகளில், வெள்ளாடுகள் சரியான அளவில் புற்களை மேய்ந்து, சுற்றப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு இருக்கச் செய்கிறது.
அந்நாளில் நாட்டு மாட்டின் தயிரையோ, பாலையோ கலயத்தில் கட்டிக் கொண்டு அமாவாசை போன்ற தினங்களில் கோவிலுக்கு செல்வார்கள். சென்னிமலையில் அந்த அபிசேக தயிரை பெரிய வெள்ளை துணியில் கட்டி வைப்பார்கள். அதில் உள்ள திரவங்கள் வடிந்து திட பால் பொருள் கிடைக்கும். அந்த மாவினை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர்.
நாட்டு மாட்டு பாலில் நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை. கலப்பின மாட்டில்தான் A1 புரதம் இருக்கிறது.
கலப்பின மாட்டு பாலில் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ஹார்மோன்-மரபின நோய் கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. பால் மிக அதிகமாக கிடைக்கும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபணுவிலேயே அதிகமாக உள்ளது.
கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயல்பாடு உடையது. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குரியது. இவற்றின் காரணமாக ஆண்களுக்கு மந்தமான பாலியல் ஹார்மோனும், செயல்பாடும், விந்து வீரிய குறைவும், வீர வீரியக் குறைவும் ஏற்படுகிறது. பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சி பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது. இதன் காரணமாக தாம்பத்திய பிரச்சனைகளை விதைத்து விவாகரத்தில் கொண்டு விடுகிறது.
ஆரம்பத்தில் நாட்டு மாடுகள் சரி விகிதத்தில் கலப்பு செய்யப்பட்டபோது நாட்டு மாட்டு மரபு ஆதிக்கம் செலுத்தியது. இன்று பல அடுக்குகள் கடந்து வெளிநாட்டு பன்றிகளின் மரபணு ஆதிக்கம் செலுத்துகிறது. தற்கால குடும்ப சீரழிவுக்கு நாம் காணாமல் விட்ட ஒரு மிக பெரிய ஓட்டை நாட்டு மாட்டு இழப்பு. இது வெறும் நாட்டு மாட்டு விளம்பரம் அல்ல. கூகிள் ஸ்காலரில் தேடி படிக்கவும் (Read Google Scholars).
நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. இன்று தமிழகம் மற்றும் பாரதம் முழுக்கவே பெரும்பணக்காரர்கள் நூற்று கணக்கில் நாட்டு மாடுகளை வளர்த்து வருவது எத்தனை பேருக்கு தெரியும்?
நாட்டு மாடுகள் நமக்கு தரும் உணவு சாத்வீகமானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், குணமும், கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடைய இறை தன்மையாக மாறுகிறது. இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம்.
கலப்பின பசுக்களின் பால் மன நலனுக்கு மிக கேடானது. ஒரு ஸ்லோ பாய்சன் போல. இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் A2 பால் என பிரித்து விற்க துவங்கியுள்ளன. இன்று திருநீறு என்னும் பெயரில் விற்கப்படும் பேப்பர் எரித்த சாம்பலை விடுத்து நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து எடுத்த திருநீறை பயன்படுத்தி பாருங்கள்
சிந்தையும் உடலும் நல்ல மாற்றம் காணும். உடலின் பித்தத்தை அப்படியே உரியும். நாட்டு மாட்டு கோசாலை, மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களில் கிடைக்கும். முற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும், நாட்டு மாடுகளும் தான்.
நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம் சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம். திருடர் பயம் இருந்த நாட்களில் கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம். இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை செய்து விட்டது. நாமும் சீரழிந்து மாடுகளையும் சீரழியச் செய்கிறோம்.
நாட்டு மாடுகள் இருந்த வரை நாம் பொருளாதாரத்தில் சுய சார்பு பெற்றிருந்தோம். ஆனால் இன்று வெளிநாட்டின் அடிமையாகி போனோம். நாட்டு மாடுகள் நம் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் தேவை! வீட்டில் வளர்க்க இயலவில்லையெனினும், கொஞ்சம் பணம் அதிகம் செலவு செய்தேனும் நாட்டு மாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள். நகரத்தில் வசதியுள்ளவர்கள், கிராமத்தில் தங்கள் பண்ணையில் கூட்டாக சேர்ந்து இருபது, முப்பது மாடுகள் வாங்கி தினமும் பிரித்து கொள்ளுங்கள்.
மரபணு மாற்றப்பட்ட கலப்பின பசுக்கள் இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன. இந்திய நாட்டு ரகத்தில் காங்கேயம், சிகப்பசக்கி, கார்பார்கர், சாகிவால் என பல வகைகள் உள்ளன. ஆனால், ஜெர்சி, பிரிசியன் ரெட்டேன், சிவிஸ் பிரவுன் போன்ற அயல்நாட்டு இன மாடுகளைத்தான் சமீபகாலமா விவசாயிகள் விரும்பி வளர்க்கிறார்கள். நாட்டு மாடுகள் நாள் ஒன்றுக்கு 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை குறைந்த அளவு பாலைத் தருவதாலும், பால் பற்றாக்குறை ஏற்படுவதாலும் சில மிருக இனத்திலிருந்து ஜீன் மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுப் பசுக்களில் இருந்து பால் உற்பத்தி செய்ய விவசாயிகளை அரசே ஊக்குவித்துக் கொண்டு வருகிறது. ஜெர்சி இன மாடுகளில் வேர்வை நாளங்களும், திமில்களும் இல்லாததால், அதன் வெப்பம் பால், சிறுநீர் மூலமாகத்தான் வெளியேறுகிறது.
மேலும் இம் மாடுகளின் கன்றுகள் 6 முதல் 8 மாதத்திற்குள் பருவமடைகின்றன. அதுமட்டுமில்லாமல் அயல்நாட்டு இன மாடுகளின் சாணமும், சிறுநீரும் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்த நன்மையையும் கொடுப்பதில்லை. நம்ம நாட்டு மாடுகளில் வேர்வை நாளமும், திமிலும் இருப்பது மட்டுமில்லாமல், சிறுநீர், சாணத்திலிருந்து இயற்கை உரம் போன்றவற்றைத் தயாரிக்கலாம். இவ்வளவு சிறப்புகள் நாட்டு மாடுகளில் இருந்தாலும் பால் அதிகமாக கொடுக்கிற ஒரே பேராசை காரணத்தினாலேயே அயல்நாட்டு இனங்களை இந்தியாவில் வளர்த்து வருகிறார்கள்.
தற்போது தமிழகத்தில் காங்கேய மாடுகள் 80 சதவிகிதம் வரை அழிந்து விட்டது. இதனாலேயே பல நன்மைகள் கொண்ட நாட்டு மாடுகளில் அதிகப் பால் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி நம் இனங்களைக் காக்கலாம் என்ற எண்ணம் மனதிற்குள் எல்லோருக்கும் வர வேண்டும். மாட்டு வர்க்கத்தில் நல்ல வம்சங்களைக் கண்டுபிடித்து பால் அதிகம் கொடுக்கும் காங்கேயம் பசுவின் கன்றை, அதே அளவில் பால் கறக்கும் வேறு பசுவின் காளையுடன் இனப்பெருக்கம் செய்ய வைப்பதன் மூலம் அதிகப் பால் உற்பத்தி செய்யலாம்.
செயற்கை உரங்களால் மண் தனது வளத்தை இழந்து வரும் நிலையில், விவசாயிகளின் கவனம் இயற்கை உரங்களின் பக்கம் திரும்பியுள்ளது. செயற்கை உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்களின் விலை குறைவு என்பதை விட அவற்றை விவசாயிகளே உற்பத்தி செய்ய முடியும் என்பதே இதன் தனிச் சிறப்பு.
மண்ணின் வளம் இயல்பாக இருந்தால் மட்டுமே பயிர் உற்பத்திக்கு ஏற்ற நிலை உருவாகும். பயிர்க் கழிவுகள், விலங்கினக் கழிவுகள் காலப்போக்கில் ரசாயன மாற்றம் அடைந்து மண்ணின் அங்ககப் பொருளாக மாற்றம் அடைகின்றன. இந்த ரசாயன மாற்றம் ஏற்படுவதற்கு மண்ணில் இயற்கையாக உள்ள ஏராளமான நுண்ணுயிர்கள் உதவுகின்றன.
இதைத் தவிர மண் புழுக்கள், பல்வேறு பூச்சிகள், நத்தை, கரையான், எறும்பு திண்ணி போன்ற பிராணிகளும் மண்ணின் வளம் சிறக்க வழிவகுக்கின்றன. 10 டன் குப்பை உரம் 50 முதல் 70 கிலோ தழைச் சத்தையும், 15 முதல் 20 கிலோ மணிச் சத்தையும், 50 முதல் 70 கிலோ சாம்பல் சத்தையும் தரவல்லது.
திடக் கழிவுகளில் பயிர்களுக்குத் தேவையான எல்லா சத்துகளும் அடங்கி உள்ளன. இந்த பண்ணைக் கழிவுகளைச் சரியான முறையில் பயன்படுத்தினால் அதில் இருந்து அதிக சத்துகளை பயிர் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றித் தர முடியும்.
கிராமங்களின் வாழ்வாதாரமாகத் திகழும் கால்நடை வளர்ப்பு, பண்ணையாளர்களின் ஏழ்மை நிலையைப்போக்கி, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுகிறது. தினமும் வருவாய் தரக்கூடிய கறவை மாடு வளர்ப்பை சிறு, குறு விவசாயிகள் நம் நாட்டில் முக்கிய தொழிலாகக் கருதி ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கறவை மாடுகள் பெரிய அளவில் வைக்கோல், சோளத்தட்டை போன்ற பயிர்க்கழிவுகளையே நம்பி வளர்க்கப்படுவதால், பால் உற்பத்தி குறைவாக உள்ளது.
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசோலாவை உற்பத்தி செய்து பசுந்தீவனம் மற்றும் வேளாண் பயிர்களுக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப்பயன்படுத்தலாம். அத்துடன் அசோலா, இரசாயன உரமில்லா ஒரு மாற்றுத்தீவனமாக விளங்குவதால், அனைத்து வகைக்கால்நடைகளுக்கும் ஒரு தீவனமாக அமைகிறது. இதனைக் கால்நடை மற்றும் கோழிகளுக்குப் புரதச்சத்து மிகுந்த தீவனமாகப் பயன்படுத்தி உற்பத்திச்செலவினையும் குறைக்க முடியும்.
இயற்கையோடு இணைந்ததே நம் விவசாயத்தொழில். பழக்க வழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் மட்டும் நம் மக்கள் இயற்கை விரும்பிகள் அல்லர். விதைக்க உரமாக வைக்கப்பட்டதும் இயற்கைப்பொருட்களான மாட்டின் சாணமும், கோழிகளின் கழிவும், பிற காய்ந்த இலை, தழைகளுமே ஆகும். இப்படிச் செய்யப்பட்ட விவசாயம் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் வழங்கியது. ஆனால் இன்று செயற்கை உரங்கள் மண்ணின் வளத்தை அழித்துக்கொண்டு வருகிறது. இந்நேரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடைக் கழிவுகளைக் கொண்டு பஞ்சகவ்யாவைத் தயாரித்து பசுந்தீவனம் மற்றும் வேளாண்பயிர்களுக்கு நோய்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுத்தலாம். இதன் மூலம் இரசாயனமில்லா இயற்கை அங்கக வேளாண் வழிப்பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடைகளைச் சிறப்பாகப் பராமரிக்கவும், அதிக வருமானம் பெறவும் தரமான தீவனப்பயிர்களை உற்பத்தி செய்வது மிகவும் அவசியம். பசுந்தீவனத்தைப்பயிர் செய்வதன் மூலம் மண் வளம், மண்ணின் நீர் தாங்கும் சக்தி அதிகரிக்கப்படுகிறது.களை மற்றும் உபயோகமற்ற புல் மற்றும் பூண்டுகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. பயறு வகைத்தீவனப்பயிர்களை வளர்ப்பதன் மூலம் மண்ணின் சத்துகள் குறிப்பாக தழைச்சத்து பெருகுகிறது.
இலாபகரமான பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்குப் புரதச்சத்து மிகுந்த பயிறு வகைத்தீவனங்களை அளிப்பது அவசியமாகிறது. புல் மற்றும் தானிய வகைத்தீவனங்களுடன் பயிறுவகைத் தீவனங்களைக்கொடுப்பதன் மூலம் அடர்தீவனம் அளிப்பதற்கான செலவைக் குறைக்கலாம். தீவனப்பயிர்கள் உற்பத்திக்கான வழிமுறைகள்
குறைந்த நிலப்பரப்பில் அதிக மகசூல் தரக்கூடிய தீவனப்பயிர் ரகங்களைத்தேர்வு செய்ய வேண்டும்.
இறவை மற்றும் மானாவாரிக்கு ஏற்ற தீவனப்பயிர்களைப் பயிர் செய்ய வேண்டும்.
மண்பரிசோதனை செய்து, அதற்கேற்ற தீவனப்பயிர்களைப் பயிர் செய்ய வேண்டும்.
பசுந்தீவனப் பயிர்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்
புல் வகைத் தீவனம்
தானிய வகைத் தீவனம்
பயிறு வகைத் தீவனம்
மரவகைத் தீவனம்
புல் வகைத்தீவனங்கள்
இறவைப்பயிர்கள் : கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியாப்புல்
மானாவாரிப்பயிர்கள் : கொழுக்கட்டைப்புல், தீனாநாத் புல்
தானியவகைத்தீவனங்கள்
இறவைப்பயிர்கள் : தீவன மக்காச்சோளம், தீவனச்சோளம், தீவனக்கம்பு
மானாவாரிப்பயிர்கள் : தீவனச்சோளம், தீவனக்கம்பு
பயிறுவகைத் தீவனப்பயிர்கள்
இறவைப்பயிர்கள்:வேலிமசால், குதிரைமசால், தட்டைப்பயிறு, கொத்தவரை, சோயாமொச்சை, சென்ட்ரோ
மானாவாரிப்பயிர்கள் : வேலிமசால், முயல்மசால், டெஸ்மோடியம், சிராட்ரோ, சங்கு புஷ்பம்
குறுகிய காலப் ப்பயிர்கள் : துவரை, கொள்ளு, அவரை, தட்டைப்பயிறு, கொத்தவரை
காட்டு வாழ்க்கையில் இருந்து, நாகரிகப் பாதையில் நடைபோடத் தொடங்கிய மனிதன், பாலுக்காக மட்டுமல்லாமல்... உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து என பல வகையிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்த்துக் கொண்ட விலங்குகளில் ஒன்றுதான் மாடு!
கன்னியாகுமரி தொடங்கி, காஷ்மீர் வரை பல்வேறு பெயர்களில் வகைவகையான இன மாடுகள் இங்கே இருக்கின்றன. ஆனால், காலப்போக்கில்... 'அதிக பால்' என்கிற கோஷம் இந்தியாவில் உரத்து ஒலித்ததோடு, மாடுகளின் பிற தேவைகளும் குறைய ஆரம்பித்துவிட்டது. இதனால், நம் நாட்டு ரக மாடுகள் எல்லாம் 'அடிமாடு' எனும் நிலைக்குத் தள்ளப்பட்டு, வெளிநாட்டுக் கலப்பின மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது
அதேசமயம், 'நம் நாட்டு மாடுகளிலும் அதிக பால் கொடுக்கும் மாடுகள் இருக்கின்றன' என்கிற உண்மையை உணர்ந்த தமிழக விவசாயிகளில் சிலர், வடமாநிலங்களில் இருந்து அத்தகைய மாடுகளை வாங்கி வந்து வளர்த்து வருகிறார்கள்..