வேளாண் மையம்

அங்கக தேங்காய் வர்த்தகம்

தமிழ்நாட்டில் 9 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கலாம். ஆரம்பத்தில் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளில்தான் தென்னை விவசாயம் பரவலாக இருந்தது. ஆனால், அந்த நிலை மாறிவிட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணியோடு, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என்று பல மாவட்டங்களில் புதிய தென்னை விவசாயிகள் உருவாகி வருகின்றனர். ஓரளவு தண்ணீர் வசதி இருக்கும் பகுதிகளில் கூட சொட்டுநீர் பாசனம் அமைத்து தென்னை சாகுபடியை செய்து வருகிறார்கள். ஆள் பற்றாக்குறை, ஓரளவு கிடைக்கும் கட்டுபடியான விலை போன்ற விஷயங்கள்தான் பல விவசாயிகள் தென்னைக்கு மாற காரணமாக உள்ளது.

கேரளாவைப் பொருத்தவரை மழையை நம்பி இருக்கும் மானாவாரித் தென்னைகள்தான் அதிகம். ஆரம்ப கால நாட்டுமரங்கள்தான் அங்கு அதிகம். அதில் சராசரி உற்பத்தி மரம் ஒன்றுக்கு 80 முதல் 100 தேங்காய் என்கிற அளவில்தான் இருக்கும். மேலும், அங்கு புதிய தென்னை விரிவாக்கம் நடைபெறவே இல்லை. இறவை பாசனத்தில் தென்னை சாகுபடியும் இல்லை. ரப்பர் விவசாயத்தில் நல்ல லாபம் கிடைப்பதால் தென்னை விவசாயத்தை விட்டு ரப்பர் மர வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருவதால் தேங்காய் உற்பத்தி வெகுவாக அங்கு குறைந்து விட்டது. தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் நாட்டுரக தென்னைகளை விட, குறுகிய காலத்தில் அதிக மகசூல் கொடுக்கும் வீரிய ரக தென்னை நடவு அதிகம். ஆண்டுக்கு மரம் ஒன்றில் இருந்து 300 தேங்காய் வரை அறுவடை செய்யக்கூடிய ரகங்கள் இங்கு வந்து விட்டது. அதனால், தேங்காய் உற்பத்தியும் அதிகரித்து தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

அதே நேரத்தில், தமிழகத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை ஆகியவற்றின் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றனர் தமிழகத்தில் பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய பகுதிகளில் தேங்காய் உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. இதன் மூலம் நல்ல முறையில் விற்பனை செய்யலாம்

கீரை உற்பத்தியாளர்

தமிழகத்தில், நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தி, பல விதமான கீரை வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.கடந்த ஆண்டில் பெய்த மழையால், பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இதை பயன்படுத்தி, கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இரண்டு மாதங்களாக பெய்து வரும் மழையும், விவசாயிகளுக்கு கை கொடுத்து வருவதால் தமிழகத்தில் கீரை விளைச்சல் அதிகரித்து, பல வகை கீரைகள் சந்தைக்கு வருகின்றன. சென்னை உள்ளிட்ட சந்தைகளில், மொத்த விலையில், ஒரு கட்டு கீரை, ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. இவற்றை வாங்கிச் செல்லும் வியாபாரிகள், ஒரு கட்டு, 10 ரூபாய்க்கு விற்கின்றனர். மருத்துவ குணமுடைய பலவகை கீரைகளும் விற்பனைக்கு வருகிறது.

வாழை உற்பத்தியாளர்

உலகம் முழுவதும் உள்ள விவசாயிகள் வாழையை பலதரப்பட்ட சாகுபடி முறைகளில் உற்பத்தி செய்கிறார்கள். குறிப்பிட்ட மண், வானிலை நிலைமைகள் மற்றும் சந்தைவாய்ப்புகளில் விவசாயிகளின் நுண்மை, அனுபவம், பாரம்பரியத்தை இந்த சாகுபடிமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன.

பணம் மற்றும் வேலைவாய்ப்புகளில் பழப் பயிர் ஏற்றுமதி முக்கிய பங்கு வகித்தாலும், இவர்கள் பொருளாதார அல்லது சமூக ரீதியாகவும் பின்தங்கியுள்ளனர். ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடுவதால் சுற்று சூழல் பாதிப்படைகிறது. சந்தைகளில் பொருளுக்கு பொருள் விற்பனையில் போட்டி நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல், நுகர்வோரின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வு என்னவென்றால், பராம்பரியமாக ஒரே பயிரை பயிரிடும் முறையிலிருந்து பலதரப்பட்ட பயிர்களை பயிரிடும் முறைக்கு மாறவேண்டும்.

1. புறக்கடை தோட்டம்
2. பயிர் சுழற்சி
3.ஊடுபயிரிடுதல்
4. கலப்புப் பயிரிடுதல்
5. பல் அடுக்கு பயிரிடுதல்

பழங்கள் உற்பத்தியாளர்

பண்டைய தமிழகத்தில் மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகள் என்று வழங்கப்பட்டன. ஔவை அதியமானுக்கு கொடுத்த நெல்லிக்கனியும், நாரதர் சிவனிடம் கொடுத்த ஞானப்பழமும் பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

பூக்கும் தாவரங்களில் விதையுடன் கூடிய முதிர்ந்த சூலகமானது பழம்(கனி) என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் உள்ள பழம் காய் எனப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக சர்க்கரைத் தன்மையைக் கொண்டவை. இது பழத்தை உண்ண வரும் விலங்குகளையும், பறவைகளையும் ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால் அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது.

விதை பண்ணை

விதைகள் மிக குறைந்த அளவில் கிடைக்கும். ஒரு முறை பயிர் செய்தால் தலைமுறைக்கும் விதைகளை அழியாது பார்த்துக்கொள்ளலாம்.

உங்களிடமுள்ள நாட்டு ரக விதைகளை கொடுத்து உங்களுக்கு தேவையான விதைகளை பண்டமாற்று முறையிலும் பெற்றுக்கொள்ளலாம். விதைகளை கொரியரிலும் தேவைப்படுவோருக்கு அனுப்பி வைக்கின்றோம்.

காய்கறிகள்,கீரைகள்,மூலிகைகள், மரவிதைகள்,பழங்கள், தானியங்கள்,பயிறு வகைகள் என எல்லா நாட்டு விதைகளையும் சேகரித்து விவசாயிகள் மாற்று சுழற்சி முறையில் விதைகளை பயன் படுத்தி பயனடையலாம்..

இயற்க்கை நெல் தானியங்கி உற்பத்தி மையம்

விளையும் பயிர் முளையிலே என்று கூறுவார்கள் விதை சீராக நல்ல விதையாக இருந்தால் தான் முளை நன்றாக அமையும். நல்ல விதைகளைத் தெரிந்தெடுக்க வேண்டும். நல்ல விதையினைத் தெரிந்து இட வேண்டும்.

நாம் விளைவிக்கும் பொருள்களில் நல்ல தரமானவைகளை விதைக்காகத் தனியாக எடுத்து அதைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வது நமது கிராமங்களில் பரம்பரைப் பழக்கமாகும்

நெல், சோளம், கம்பு, ராகி, முதலிய தானியங்கள் விளையும் போது அதில் நன்றாகத் தூற்றி மணிகளைப் பிரித்து அதை நன்கு உலர வைத்து வெயிலில் காய வைத்து விதைக்காக என்று தனியாகப் பக்குவப்படுத்தி வைப்பது என்பது பழக்கமாகும்.

வேர்க்கடலை உளுந்து, மொச்சை, துவரை, பச்சைப்பயறு முதலிய பயறு வகைகளிலும் அவரை, புடல், வெண்டை பீர்க்கை பாவை பூசணி முதலிய காய்கறிகளிலும் விதைக் கென்று தனியாக எடுத்து அதைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வதும் பழக்கமாகும்.

இயற்க்கை பயிர் உற்பத்தி மையம்

பயறு வகை சாகுபடி பரப்பளவு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. அதேவேளையில், பயறு வகைகளின் தேவை மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்த நிலையில், நாம் குறைவான சாகுபடி பரப்பில் அதிக மகசூல் எடுக்க மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும் .

வரப்பு பயிர் மற்றும் ஊடு பயிர்: பயறு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க, அதன் சாகுபடிப் பரப்பை கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும். சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டுமெனில், மற்ற பயிர்கள் சாகுபடி செய்யும் போது அதில் பயறு வகை பயிர்களை வரப்புப் பயிராகவும், ஊடுபயிராகாவும் சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பயறு வகைப் பயிர்களின் உற்பத்தித் திறனையும் அதிகப்படுத்த முடியும்.

இயற்கை எண்ணெய் வித்து உற்பத்தி மையம்

தரமான எண்ணெய்வித்து விதைகள், புதிய இரகங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மட்டு மே உற்பத்தியை பெருக்குவதற்கான எளிய வழியாகும். நிலக்கடலையில் புதிய ரகங்களான கோ 6, கோ 7 ஆகியன வறட்சியை தாங்கி வளர கூடியன.

எள் பயிரில் டி.எம்.வி 7 குறுகிய கால பயிராகும். மற்றும் எண்ணெய்ச் சத்து அதிகம் உள்ள ரகமாகும். தரமான விதைகளை நாமே உற்பத்தி செய்வதினால் நல்ல விதை கள் கிடைப்பதுடன் அதிக வருமானமும் கிடைக்கும் என்றார்.

நிலக்கடலை சாகுபடி செலவில் 40% விதைக்கு செலவாகிறது. தரமான விதைகளை பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும். விதை உற்பத்திக்கு நிலத் தேர்வு செய்யும்போது முந்தைய பயிர் அதே பயிராக இருக்கக் கூடாது.

பருவத்தில் பயிர் செய்வது மிகவும் முக்கியமாகும். அதிக மழையோ, அதிக வெயிலோ அறுவடை தருணத்தில் வராமல் இருக்க பருவத்தில் பயிர் செய்ய வேண்டும் இனக் கலப்பைத் தவிர்க்க ரகம் மற்றும் பயிர்க் கலப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். செடி பருவம், பூக்கும் பருவம் மற்றும் காய்கள் பிடிக்கும் தருணத்தில் கலப்புகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும்.

பயிர்களை பூப்பூக்கும் முன்புவிதை சான்றளிப்பு துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.பதிவு செய்வதற்கு விதை சான்றளிப்பு அட்டை, விதை வாங்கிய ரசீது அவசியமாகும். அந்தந்த வட்டார விரிவாக்க மையத்தில் பதிவுசெய்துக் கொள்ளலாம் என்றார்.

ஒரு ஏக்கருக்கு நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் 160 கிலோ தேவைப்படும். 80 கிலோ அடியுரமாகவும், மீதமுள்ள 80 கிலோ பூக்கும் தருவாயில் மண் அணைத்து இட வேண்டும். இப்படி செய்வதால் காய்கள் திரட்சியுடன் கிடைக்கும். பயிர்களின் எண்ணிக்கையை பராமரிப்பதின் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்..

தேனீ வளர்ப்பு

தேனீ வளர்ப்பு இன்றைய காலகட்டத்தில் பல ஆரோக்கியமான பிரச்சனைகளுக்கு தேன் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது.

தேனீக்களின் வகைகள் – கொம்புத் தேனீ, மலைத் தேனீ, கொசுத் தேனீ, அடுக்குத் தேனீ, மேற்குலகத் தேனீக்கள், கிழக்குலகத் தேனீக்கள் ஆகும். இத்தகைய தேனீ வளர்ப்பு மூலம் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறலாம்.