விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்து நீரை சிக்கனமாக பயிர்களுக்கு பாய்ச்ச வேண்டும், நுண்ணீர் குழாய்கள் மூலம் நீரை பாய்ச்சினால் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் பாசன நீரை 4 ஏக்கருக்கு பாசனம் செய்யலாம்.
இன்றைய காலகட்டத்தில் மண்வளத்தை பாதுகாப்பது நமது கடமையாகும். மண்ணை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும். மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் பெருக்க நமது வயலில் தொழு உரங்களை இட வேண்டும். மேலும் தக்கை பூண்டு, சணப்பு போன்ற தழை உரப்பயிர்களை வயலில் விதைத்து 45ம் நாள் மடக்கி உழவு செய்ய வேண்டும். இலை, தழைகளை வெட்டி வயலில் இட்டு மக்க வைக்க வேண்டும்
இதனால் கோடை வறட்சி மற்றும் நீர் சிக்கனமாக உழவர்கள் பயன்படுத்தி பயனடையலாம்
கிராம புறங்களில் மண் பாண்டங்களை பயன்படுத்தும் பழக்கம் குறைந்து விட்டதால், அத்தொழில் நலிவடைந்து வருவதாக, மண் பாண்ட தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.கடந்த காலங்களில், கிராம பகுதிகளில் மட்டுமின்றி, நகர் புறங்களிலும், வீடுகளில், தண்ணீர் பிடித்து வைக்க, சமையல் செய்ய, தானியங்களை பாதுகாக்க, களிமண்ணால் ஆன, மண் பாண்டங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர்.மனிதர்கள் தாகம் தீர்க்க, மண் பானை தண்ணீர் கட்டாய உபயோகத்தில் இருந்தது.
வீடுகளில், கால்நடைகள் அருந்த, மண் தொட்டியில் தண்ணீர் ஊற்றி வைக்கும் நடைமுறை இருந்தது.எவ்வளவு அதிக செலவு செய்து, மண் பானையில் பாதுகாத்து அருந்தும் நீருக்கு ஈடாகதெனவும், இன்றளவும் முன்னோர்கள் கூறி வருகின்றனர். மண் பாத்திரத்தில் சமைத்து, உணவருந்தும் முறையால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் குறித்தும், பெரியோர் தங்கள் இளைய தலைமுறைகளுக்கு தற்போது வரை கூறி வரும் அறிவுறுத்தலை, காதில் வாங்க தான் யாரும் இல்லை
மண் பாண்டங்கள் மீது மெல்ல, மெல்ல ஆர்வம் குறைந்ததால், அதை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் பாதித்து வருகிறது. அந்த நாட்களில் கட்டை வண்டியான மாட்டு வண்டியில், நுாற்றுக்கும் மேலான மண் பானைகளை கயிறு கட்டி அடுக்கி, எடுத்து சென்று, சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை வரும்போது ஒரு பானை மிஞ்சாது. அத்தனையும் விற்று தீர்ந்து விடும். ஆனால், இன்று நிலைமை அப்படியல்ல. பொங்கல் சீசனில் பானைகளும், கார்த்திகை தீபம் நேரத்தில் அகல் விளக்குகளும் மட்டும் விற்பனையாகின்றன. களிமண் செலவு, விறகு செலவு, உழைப்பு என, முதலீடு செய்து, பொருட்கள் விற்காமல் போகும் போது கஷ்டம் ஏற்படுகிறது.ஆனாலும், கற்றுக்கொண்ட கைத்தொழிலை காலம் முழுக்க செய்வோம் என, குயவர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர்.
நாகரிகம் வளர்ந்து விட்டதாகவும், மண் பானை எல்லாம் பழைய கால பயன்பாடாகவும் கிராம வாசிகளின் எண்ண ஓட்டத்தில் பதிந்துள்ளது. இத்தொழிலில் மண் மிதித்தல் உள்ளிட்ட கடின உழைப்பை செலுத்த வேண்டி உள்ளதால், இளைய தலைமுறையினர் தொழிலில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், அடுத்த, 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் இருப்பரா என்பதும், மண் பானைகள் தயாரிக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதனை மீட்டெடுக்கவும் பாரம்பரியம் போற்றவும் கட்டமைப்பு செய்ய வேண்டும்
கி.மு 7500 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதலில் வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செங்கல் கற்களை மெசப டோமியாவில் (தற்போதைய ஈராக்) கி.மு 4000 - ம் வாக்கில் உருவம் பெற்றது. செங்கல் (Brick) என்பது களிமண்ணை செவ்வக வடிவில் சூளையில் அல்லது வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செயற்கைக் கல்லாகும். கட்டிடங்களையும் நடைபாதைகளையும் அமைக்க செங்கல் பயன்படுகிறது.
செங்கல், ஓடுகளுக்கு மூலப்பொருளாக குளத்து மண் மற்றும் குருமண் பயன்படுத்துகின்றனர். இரண்டு அல்லது மூன்று குளத்து மண், குருமண்ணைச் சேர்த்து செங்கல் மற்றும் ஓடுகள் தயாரிக்கப்படுகின்றன.
விவசாய உபகரணங்கள் என்பது விவசாயத்திற்கு உதவ ஒரு பண்ணையில் பயன்படுத்தப்படும் எந்த வகையான இயந்திரமாகும். இந்த வகையான சிறந்த உதாரணம் டிராக்டர் ஆகும்.
விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள். கற்காலத்தில், கல், மர பாறை, மண்வெட்டி, அரிவாள் போன்ற விவசாய கருவிகள் விவசாயம் நிகழ்ந்தவுடன் தோன்றின. யாயோய் (யாயோய்) சகாப்தத்தில், ஜப்பானில் பழமையான விவசாய கருவிகள் தோன்றின, கோஃபுன் காலத்தில் இரும்பு விவசாய கருவிகள் பயன்படுத்தத் தொடங்கின. உழுதல் என்பது (கோன்) கருவி, மேலாண்மை கருவி, அறுவடை கருவிகள், எந்திர தயாரிப்புக் கருவிகள், நீர்ப்பாசன (பாசன) வடிகால் சாதனம், செயல்படுத்த உழுது (கலப்பை) பண்படுத்திக் களைக்கோடு (கலப்பை) கலப்பை, இதுபோன்ற வாகனங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது, Tauchi கார், வணக்கம், அத்தகைய திண்ணை, மேலாண்மை கருவியில் பித்து ஹாக், விதைப்பு (விதைப்பு) சாதனம், இரும்பு மாற்று, நடவு ஆட்சியாளர், ஜப்பானிய ரேக் (கன்சூம்), அறுவடை உபகரணங்கள் அரிவாள், மோஹ்ர், பலவிதமான புகைப்பட சாதனங்கள், தோசாவோ செயலாக்க தயாரிப்பு உபகரணங்கள் (கராசாவ்), கொக்குடா அட்டவணை, (-சென்பாகோ) சென்ஹா சலவை, விசிறி விசிறி (டோக்காய்), மோட்டார் (மோட்டார்) போன்ற கால் கதிரை இயந்திரம், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் உபகரணங்கள் நீர் சக்கரம், ஹனெட்சுரூப், ஒரு பம்ப், வாகனங்கள் கால்நடை கார்கள், வண்டிகள் போன்றவை, மொக்கோ, சிறிய தட்டையான படகு போன்றவை உள்ளன. இது தவிர, ஆயர், தேயிலை விழாக்கள், பழத் தோட்டங்கள், பட்டு வளர்ப்பு போன்றவற்றில் தனித்துவமான விவசாய கருவிகள் உருவாக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு வகையான பிறப்புகளும் பிறக்கின்றன, மேலும் நாடு மற்றும் பிராந்தியத்திற்கு ஏற்ப பல வகைகள் பிறக்கின்றன. இருப்பினும், நவீன சகாப்தத்தில், மனிதவள / கால்நடை சக்திக்கான பல விவசாய கருவிகள் விவசாய இயந்திரங்களில் தங்கள் நிலைகளை சக்தியால் செலுத்துகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பே செட்டிநாடு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிக்கவென்று சிறப்பான அமைப்புகள் வைத்து கட்டப்பட்டிருக்கின்றன
வானம் பார்த்த ஊர்களான சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் மழை நீரை நம்பியே வேளாண்மை உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே நகரத்தார் காரைக்குடி, கோனாபட்டு, ஆத்தங்குடி, கானாடுகாத்தான, கோட்டையூர், தேவகோட்டை, ராங்கியம், சிறுகூடல்பட்டி, வலையபட்டி, புதுவயல் மற்றும் செட்டிநாட்டு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தங்களின் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புக்களை கட்டிவைத்துள்ளனர்.
வீட்டின் நடுப் பகுதியில் மழைநீர் தேங்கும்படி முற்றம் அமைத்துள்ளனர். எல்லா வீட்டிற்குமே (மாடமாளிகையாய் இருந்தாலும்) கூரைக்கு நாட்டு ஓடுகள்தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. மாடியின் மேல் தளத்தில் விழும் மழைநீர் நேராக கூம்பு குழாயின் வழியாக இரண்டாவது தளத்திற்கு வந்து அங்கிருந்து அடித்தளத்திற்கு கூடல் (கூடறு) வாய்த்தகரத்தின் வழியாக வந்து சேர்கிறது, இடையில் நாட்டு ஓடுகளுக்கு நீரை உறிஞ்சாத தன்மை உள்ளதால் ஓடுகளில் விழும் மழை நீரும் முற்றத்துக்குள் வந்து கொட்டும். அப்படி வந்து கொட்டும் நீரை கூடல்வாய்க்கு கீழே பெரிய பித்தளை (அகழி) அண்டாக்களை முற்றத்தின் நான்கு பக்க மூலைகளிலும் வைத்து அதன் வாயை வெள்ளை வேட்டித் துணி கொண்டு வேடு கட்டி பிடித்து சேமித்து வைக்கப்படும். பின்னர் சேமிக்கப்பட்ட நீரை தேவைப்படும் போது எடுத்து சுடவைத்து அருந்துவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.
தங்களுக்கு தேவையான நீரை அகழியில் பிடித்தது போக மேல்கொண்டு மிஞ்சும் மழை நீரை வீணடிக்காமல் தங்களது வீட்டின் ஓரத்திலேயே கால்வாய்களை அமைத்து வீட்டின் பின்புறம் கிணறு போன்ற உறையுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் கட்டி வைத்து அதனுள் விழுமாறு அமைத்துள்ளனர். இப்படி இப்பகுதியில் உள்ள வீடுகளில் அந்தக் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டட கலையினால் சிறு துளி தண்ணீர்கூட வீணாகாமல் நிலத்தடியில் சேமித்து வைக்கப்படுகின்றது. அதே போல கழிவு நீரும் வெளியே தெருவில் செல்லாதபடி நிலத்துக்குள்ளேயே கால்வாய் அமைத்து வெளியேற்றப்படுகிறது.
இப்படி வீடுகளில் மட்டுமல்லாது கோயில்கள்,தெருக்கள் என எல்லா இடங்களிலும் மழைநீரை சேமித்துவைக்கும் தொலை நோக்கு அவர்களுக்கு இருந்துள்ளது.எப்படி என்றால் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த செம்புரான் எனப்படும் பாறைக்கற்கலால் கட்டப்பட்டுள்ள குளங்கள் அங்கு ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் எங்கு தேங்கி ஓடினாலும் கடைசியில் இந்த குளத்தில் கலக்கும் விதமாக கால்வாய்கள் வெட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதனால்தான் இப்பகுதியில் உள்ள குளங்கள் என்றும் வற்றாதவையாக உள்ளன. மொத்தத்தில் நகரத்தார் கள் கட்டிய வீடுகள் யாவும் மழைநீர் சேமிப்புக்கான வடிகால்கள் என கூறலாம். இதற்கு தேவையான பொருட்கள் உற்பத்தியாளர் குழு மூலம் உற்பத்தி செய்து தரமுடியும்..
நில மேம்பாட்டு உபகரணங்கள் மேம்பாட்டு மையம்
விவசாய உபகரணங்கள் என்பது விவசாயத்திற்கு உதவ ஒரு பண்ணையில் பயன்படுத்தப்படும் எந்த வகையான இயந்திரமாகும். இந்த வகையான சிறந்த உதாரணம் டிராக்டர் ஆகும்
விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள். கற்காலத்தில், கல், மர பாறை, மண்வெட்டி, அரிவாள் போன்ற விவசாய கருவிகள் விவசாயம் நிகழ்ந்தவுடன் தோன்றின. யாயோய் (யாயோய்) சகாப்தத்தில், ஜப்பானில் பழமையான விவசாய கருவிகள் தோன்றின, கோஃபுன் காலத்தில் இரும்பு விவசாய கருவிகள் பயன்படுத்தத் தொடங்கின. உழுதல் என்பது (கோன்) கருவி, மேலாண்மை கருவி, அறுவடை கருவிகள், எந்திர தயாரிப்புக் கருவிகள், நீர்ப்பாசன (பாசன) வடிகால் சாதனம், செயல்படுத்த உழுது (கலப்பை) பண்படுத்திக் களைக்கோடு (கலப்பை) கலப்பை, இதுபோன்ற வாகனங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது, Tauchi கார், வணக்கம், அத்தகைய திண்ணை, மேலாண்மை கருவியில் பித்து ஹாக், விதைப்பு (விதைப்பு) சாதனம், இரும்பு மாற்று, நடவு ஆட்சியாளர், ஜப்பானிய ரேக் (கன்சூம்), அறுவடை உபகரணங்கள் அரிவாள், மோஹ்ர், பலவிதமான புகைப்பட சாதனங்கள், தோசாவோ செயலாக்க தயாரிப்பு உபகரணங்கள் (கராசாவ்), கொக்குடா அட்டவணை, (-சென்பாகோ) சென்ஹா சலவை, விசிறி விசிறி (டோக்காய்), மோட்டார் (மோட்டார்) போன்ற கால் கதிரை இயந்திரம், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் உபகரணங்கள் நீர் சக்கரம், ஹனெட்சுரூப், ஒரு பம்ப், வாகனங்கள் கால்நடை கார்கள், வண்டிகள் போன்றவை, மொக்கோ, சிறிய தட்டையான படகு போன்றவை உள்ளன. இது தவிர, ஆயர், தேயிலை விழாக்கள், பழத் தோட்டங்கள், பட்டு வளர்ப்பு போன்றவற்றில் தனித்துவமான விவசாய கருவிகள் உருவாக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு வகையான பிறப்புகளும் பிறக்கின்றன, மேலும் நாடு மற்றும் பிராந்தியத்திற்கு ஏற்ப பல வகைகள் பிறக்கின்றன. இருப்பினும், நவீன சகாப்தத்தில், மனிதவள / கால்நடை சக்திக்கான பல விவசாய கருவிகள் விவசாய இயந்திரங்களில் தங்கள் நிலைகளை சக்தியால் செலுத்துகின்றன.
மின்சாரத்திற்கான தேவையும் அதன் விலையும் கிடுகிடுவென அதிகரித்துச் செல்வதால் அதற்கான மாற்று வழி குறித்து உலகமே பேசிவருகிறது. இந்தநிலையில் சோலார் மின் உற்பத்தி அதாவது சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்வது சுற்று சூழலுக்கு பாதுகாப்பானது என்பதால் இப்புதிய தொழில்நுட்பம் உலகளாவிய ரீதியில் பரவலாக பின்பற்றப்படுகிறது. நமது தேவைக்கு ஏற்ப இயற்கையிடமிருந்தே மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இது. இப்போது இந்த சோலார் மின்சாரத்தில் உள்ள நன்மை தீமைகள் பற்றிப் பார்ப்போம்.
நன்மைகள்
1. ஒரு முறை செலவு செய்து Solar panels - சோலார் மின்சாரம் எடுப்பதற்கான தகடுகள் மற்றும் கருவிகளை பொருத்தி விட்டால் அடுத்த 20-25 வருடங்களுக்கு அதற்கு செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. 4-5 வருடங்களுக்கு ஒருமுறை பட்டரி மாற்றுதல் மற்றும் பராமரிப்புக்கான செலவு மட்டுமே சிறியளவில் ஏற்படும்.
2. மின்சார கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
இதனால் தற்சார்பு வாழ்கைக்கு எளிதாக கட்டமைப்பது மட்டும் அல்ல அரசாங்கத்திற்கும் மின்சாரம் உற்பத்தி செய்து தரமுடியும்
கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்கள் பொதுவாகக் கட்டிடப் பொருள்கள் என வழங்கப்படுகின்றன. பல்வேறு வகையான கட்டிடப் பொருட்கள் இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ளன. மிகப்பழைய காலத்தில் கட்டிடம் கட்டப்படும் இடங்களுக்கு அண்மையில் கிடைக்கக் கூடிய பொருட்களையே கட்டிடங்கள் கட்டப் பயன்படுத்தினார்கள். போக்குவரத்து வசதிகள் குறைந்த அக் காலத்தில், அரசர்களும், பெருந் தனவந்தர்களும் மட்டுமே தூர இடங்களிலிருந்து பொருட்களை எடுத்துவந்து கட்டிடங்களைக் கட்ட இயலும். பெரும்பான்மையான சாதாரண பொது மக்கள், தமது வாழிடங்களையும், பிற கட்டிடங்களையும் சூழலில் கிடைக்கக் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியே கட்டிக் கொண்டார்கள். காட்டுமரக் கிளைகள், இலைகுழைகள், புற்கள், கற்கள், மண், விலங்குகளின் தோல், ஏன் பனிக் கட்டிகள் கூடக் கட்டிடப் பொருட்களாகப் பயன்படுகின்றன. மேலே குறிப்பிட்ட பொருட்கள் மனிதர்கள் கட்டிடங்களைக் கட்டத் தொடங்கிய ஆரம்ப காலங்களிலேயே உபயோகத்திலிருந்தும், இன்றுவரை உலகின் பல பகுதிகளிலும் இவை உபயோகத்திலிருந்து வருகின்றன.
சிறிய குடிசைகளை மட்டுமன்றிப் பெரும் நகரங்களையே கூட உருவாக்கிய பெருமை மண்ணுக்கு உண்டு. மண்ணால் கட்டப்படும் கட்டிடங்கள் நிரந்தரமானவையல்ல என்ற கருத்தே பொதுவாக நிலவினாலும், மண்ணால் கட்டப்பட்ட கட்டிடங்கள் பல ஆயிரக்கணக்கான வருடங்கள்கூட நிலைத்திருந்ததற்குச் சான்றுகள் உண்டு. பல நவீன கட்டிடப் பொருட்கள் போலன்றி, மண், புதுப்பிக்கப்படக்கூடியது. கட்டிடங்கள் அழிந்து போகும்போது மீண்டும் மண்ணுடனேயே கலந்துவிடக்கூடியது.
இயற்கையில் கிடைக்கும் பல்வேறு வகையான கற்கள் மிகப் பழங் காலத்திலிருந்தே கட்டடப் பொருளாகப் பயன்பட்டு வருகின்றது. சுண்ணாம்புக் கற்கள், மாபிள் கல், கருங்கல், மணற்கல் என்பவை இவற்றுள் முக்கியமானவை. நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டுமென விரும்பிய கட்டிடங்கள் இவ்வாறான ஏதாவதொரு கல்லைப் பயன்படுத்தியே கட்டப்பட்டன
தூண்கள், உத்தரங்கள், கூரைக்கான சட்டகங்கள், கதவுகள், யன்னல்கள், தளம், அலங்காரத்துக்குரிய கட்டிடக் கூறுகள் எனப் பலவாறாகக் கட்டிடங்களில் மரம் பயன்படுகின்றது.உலகின் பல பாகங்களில் மரம் இலகுவாகக் கிடைக்கக் கூடிய பொருளாக இருந்து வந்தது. இது ஒரு புதுப்பிக்கப்படக்கூடிய கட்டடப்பொருளுமாகும். எனினும், கட்டிடம் கட்டுதல், தளபாட உற்பத்தி, விறகு போன்ற பல்வேறு தேவைகளுக்காகவும், விவசாய விரிவாக்கம், நகராக்கம் என்பவற்றாலும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டமையால் மரம், பல நாடுகளில் ஒரு விலைகூடிய பொருளாக இருந்துவருகிறது. சுற்றுச் சூழல் காரணங்களுக்காகக் காடுகள் அழிவதைத் தடுக்கும் நோக்கிலும், பலத் தேவைகளுக்காகவும் மரத்துக்குப் பதிலாக வேறு கட்டிடப் பொருட்கள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டிலுள்ளன. ஆனாலும் மரம் இன்றும் ஒரு முக்கியமான கட்டிடப் பொருளே
கிராமப்புற வாழ்க்கை முறை தீவிரமாக பங்கேற்பதில் கிராம சுற்றுலா கவனம் செலுத்துகிறது. இது சுற்றுச்சூழல் சுற்றுலாவின் மாறுபாடாக இருக்கலாம். பல கிராம கிராமங்கள் சுற்றுலாவை எளிதாக்குகின்றன, ஏனெனில் பல கிராமவாசிகள் விருந்தோம்பல் மற்றும் பார்வையாளர்களை வரவேற்க ஆர்வமாக உள்ளனர் (மற்றும் சில சமயங்களில் கூட விருந்தினர்கள்). விவசாயம் மிகவும் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது, எனவே, குறைந்த கைமுறை உழைப்பு தேவைப்படுகிறது
இந்த போக்கு சில கிராமங்களுக்கு பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக இளைஞர்கள் நகர்ப்புறங்களுக்கு செல்ல வழிவகுக்கிறது. இருப்பினும், நகர்ப்புற மக்களில் ஒரு பகுதியினர் கிராமப்புறங்களுக்குச் சென்று வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர். இயற்கையையும் கலாச்சாரத்தையும் அனுபவித்து நகர்ப்புறவாசிகள் கிராமப்புற கிராமத்தில் தங்கியிருக்கும் பயணத்தின் ஒரு வடிவம்..
தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு கோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகி போகிவிட்டது. அந்த காலங்களில் விடுமுறை நாட்களில் பெரியவர்கள் வீட்டின் திண்ணையில் விளையாடும் விளையாட்டுகள், இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் வந்துவிட்டது. தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மாறி இன்று தெருக்களும் வெறுச்சோடி கிடைக்கிறது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்.
பல்லாங்குழி
பெரும்பாலும் வயது வந்த பெண்கள் தங்களது தோழிகளுடன் வீட்டினுள் அமர்ந்து பல்லாங்குழி ஆடுவது வழக்கம். வட்டமாக குழி உள்ள பலகையில் புளியாங்கோட்டை அல்லது சோழி அல்லது முத்துகளை சேர்த்து ஆடுவார்கள். கடைசி மணி தீரும் வரை ஆட்டம் நீடிக்கும். இதனால் விரலுக்கு பயிற்சியும் கணக்கு பயிற்சியும் பெற முடியும் என நம்பினர்.
இன்றைய காலத்தில் சதுரங்க பலகையே நம்மது பலரின் வீட்டில் இல்லாத நிலையல் பல்லாங்குழி பலகை எங்கே இருக்கும்
கோலி
விடுமுறை நாட்களில் சிறுவர்கள் தெருவில் பளிங்கு போன்ற கோலிக்குண்டுகளை வைத்து விளையாடுவார்கள். ஒரு போட்டியாளரின் கோலியை மற்றொருவர் தனது கோலியை கொண்டு அடிக்க வேண்டும். இலக்கை நோக்கி சரியாக அடித்துவிட்டால் வெற்றிபெற்றவர் தோற்றவர் கோலிக்குண்டுகளை எடுத்துச் செல்லலாம்.
இது அன்றைய சிறுவர்களுக்கிடைய மிக பிரபலமான விளையாட்டாகும். இதே கோலிக்குண்டுகளை கொண்டு மற்றொரு பலகை விளையாட்டும் உண்டு.
பம்பரம்
தெருக்களில் மட்டுமல்ல அன்றைய படங்களில் கூட பம்பர விளையாட்டு காட்சிகள் அதிகமாக இடம்பெறும். பம்பரக்கட்டை மட்டும் சட்டையை கொண்டு இந்த விளையாட்டை துவங்க வேண்டும். இருவர் அல்லது பலர் இணைந்து இந்த விளையாட்டை விளையாடலாம். முதலில் கீழே ஓர் வட்டத்தை இட வேண்டும், பின் சிறுவர்கள் பம்பரத்தை சுழற்றி ஒரே நேரத்தில் கீழே விட்டு சுழற்றி விட வேண்டும். அதன் பின் சுழன்றுகொண்டு இருக்கும் பம்பரத்தை கையில் எடுத்து வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்தை அடித்து வெளியில் எடுக்க வேண்டும்.
சில சமயங்களில் பம்பரம் உடைந்துவிடும், அதனால் சிறுவர்கள் பம்பரங்களை நேர்த்தியாக தேர்வு செய்வார்கள். சிலருக்கு இது பொக்கிஷம் போன்றது. தமிழகத்தை தாண்டி பல மாநிலங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படும்.
ஆடுபுலி ஆட்டம்
பெண்கள் மத்தியில் பிரபலாமான மற்றொரு பலகை விளையாட்டு இது. இருவராக அல்லது இரு குழுவினர்களாக பிரிந்து இந்த விளையாட்டை ஆடுவர். பெயருக்கு ஏற்றார்போல் புலி ஆட்டை வேட்டையாடுவது தான் விளையாட்டு. ஒருவர் 3 புலி காய்களை வைத்தும் மற்றொருவர் 15 ஆடுகளை வைத்தும் விளையாடுவர். புலி ஆட்டை வேட்டையாட முயல ஆடுகள் புலியை முடக்க வேண்டும்.
இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டாகும். தமிழகத்தை பிற மாநிலங்களிலும் இந்த விளையாட்டு பிரபலமானதாகும்
தாயம்
இரண்டு அல்லது நான்கு பேர் இணைந்து தாயம் மற்றும் காய்களை கொண்டு விளையாடும் சதுரங்க பலகை விளையாட்டு. ஒவ்வொருவரும் நான்கு காய்களை கொண்டு விளையாடுவர். முதலில் எவர் பலகையின் மையத்திற்கு சென்று மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு வருவதே விளையாட்டாகும்.
மஹாபாரத காலத்தில் இந்த விளையாட்டு விளையாடப்பட்டதாக வரலாறு உண்டு. இது பார்க்க சுலபமாக தெரிந்தாலும் வெற்றிபெற யுத்த தந்திரம் வேண்டும்.
பாண்டியாட்டம் / நொண்டி
சிறுமிகள் தெருக்களில் விளையாடும் விளையாட்டு இது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் எட்டு தொடர் பெட்டியை தரையில் வரைந்து கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் முதல் பெட்டியில் கல்லை போட்டு அந்த பெட்டியையும் கோடுகளையும் தொடாமல் நொண்டி அடித்து கடைசி பெட்டி வரை சென்று திரும்ப வர வேண்டும்.
பெரும்பாலும் அனைத்து சிறுமிகளும் விளையாடும் மிக பிரபலமான விளையாட்டு இது. ஆனால் தற்போதைய சூழலில் குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்புவதே ஆபத்தாக அமைகிறது
கண்ணாமூச்சி
இந்த ஒரு விளையாட்டு தான் தற்பொழுதும் சில குழந்தைகள் இன்றைய காலத்திலும் விளையாடும் விளையாட்டாகும். ஒருவர் கண்ணை மூடிக்கொள்ள மற்ற குழந்தைகள் வீட்டிற்குள் ஒளிந்துக்கொள்ள வேண்டும். பின்னரே கண்ணை மூடியவர் ஒளிந்திருப்பவரை கண்டுபிடிப்பது தான் விளையாட்டாகும்.
இது ஒரு முதன்மையான விளையாட்டாகும் இந்தியர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் குழந்தைகள் விளையாடும் ஓர் விளையாட்டு.
இங்கு நாம் பட்டியல் இட்டது ஒரு சில விளையாட்டுகள் தான் காலத்தால் மறைந்த பச்சைக் குதிரை, புளியங் கொட்டை, கள்ளன் போலீஸ், குலைகுலையா முந்திரிக்காய் போன்ற பல விளையாட்டுகள் உள்ளது. ஆனால் தற்பொழுதும் தேசிய அளவிலும், சில கிராமங்களில் விளையாடப்படும் கபடி, கோ கோ, உரியடி போன்ற விளையாட்டுகள் அழியாமல் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாமும் நம் வருங்கால சந்ததியனருக்கு நம் பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்து அழியாமல் பார்த்துக்கொள்வோம். விளையாடி அனுபவிக்கும் சுவாரசியம் புத்தகத்தில் படித்து, ஸ்மார்ட் போனில் தெரிந்துக்கொள்ளுவதில் நிச்சயம் கிடைக்காது. இதனை மீட்டெடுக்க வேண்டும்