கிராமத்தில் வாழும் மக்கள் பிரதானமாக விவசாயம் செய்து வருகின்றனர். வானம் பார்த்த பூமியாக உள்ள இக்கிராமத்தில் மழை பெய்தால் மட்டும்மே விவசாயம் செழிக்கும்.ஆற்று அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அவ்வப்போது கிடைக்கும் என்பதால் இவர்கள் வரட்சியை தாங்கி வளர கூடிய பஞ்சு,கேள்விரகு,மல்லி, மிளாகாய் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிள்ளைகளை படிக்க வைப்பது, திருமணம் செய்து கொடுப்பது என வாழ்ந்து வருகின்றனர். ஆதலால் காப்பீடு மற்றும் சேமிப்பு அவசியமாகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் இணைய தளம் என்பது அத்தியாவசியமாகி விட்டது. படிப்பு, பொது அறிவு என அனைத்தையும் இணையதளத்தின் மூலமே தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலையுள்ளது. இணையதள இணைப்பு உள்ள கம்ப்யூட்டரில் தேவையான தகவல்களை பெற்று தெரிந்துகொள்ள முடியும். நகரங்களில் உள்ளது போல கிராமங்களிலும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இன்று வரை இணையதள வசதி என்பது எட்டாக் கனியாக உள்ளது. 10ம் வகுப்பு முதலே இணையதளத்தில் புத்தகம் முக்கிய வினாக்கள், பொது குறிப்புகள், படிப்பில் சந்தேகம் உள்ள கணக்கிற்கான விளக்கங்கள், அறிவியல் பாடங்கள் தொடர்பான செயல்முறை மற்றும் நாட்டு நடப்புகள் உலக நிகழ்வுகள், பொது அறிவு குறித்து தெரிந்து கொள்ள இண்டர்நெட் இணைப்பு வேண்டும். இதற்கான வசதிகள் கிராமங்களில் இல்லாத நிலையில் படிப்பு சம்பந்தமாக இணையதளத்தில் தேடி தெரிந்து கொள்ள மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் கிராமப்புற மாணவர்களின் வசதிக்காக பஞ்சாயத்து அலுவலகங்களில் ஒரு கம்ப்யூட்டரில் இணையதள வசதி ஏற்படுத்தி கொடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாணவர்கள் கூறுகையில், ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் இணையதள வசதி ஏற்படுத்தி தந்தால் படிப்பு தேவைக்கான தேவையான தகவல்களை பதிவிறக்கம் செய்து புதிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இதே போல போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு இணையதள வசதி கட்டாயம் வேண்டும். கிராமங்களில் இணையதள வசதியிருந்தால் இங்கிருந்து நகர் பகுதிக்கு உள்ள பிரவுசிங் சென்டர்களை தேடிச் செல்ல வேண்டியதில்லை. தினந்தோறும் உலகத்தில் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் கிராமங்கள் தோறும் கண்டிப்பாக இணையதள வசதி செய்து கொடுக்க வேண்டும். பஞ்சாயத்து அலுவலகத்தில் இணையதள வசதி ஏற்படுத்தி கொடுத்தால் ஊராட்சி செயலர் அதனை கண்காணித்து வருவார்கள். 10ம் வகுப்பு படிக்கும் போதே போட்டி தேர்வுக்கு தயாராகின்ற போட்டி உலகமாக மாறி வருகிறது. அதற்கேற்ற வகையில் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய உதவும்
ஆடை வடிவமைப்பு, இயற்கை எரிபொருள், மழை நீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிர் பன்மை பாதுகாப்பு, கணித முறைகள், இயற்பியல் ஆய்வு முறைகள், பருவநிலை மாற்றம்,ஆற்றல் பிரமீடு, விண்வெளி வீரர், பசுமை குடில், சுகாதாரம், வாக்குப் பதிவு இயந்திரத்தின் மாதிரி செயல்பாடு, பல்லுயிர் பெருக்கம் உட்பட 240-க்கும் மேற்பட்ட மாதிரிகளை காட்சிப்படுத்த மாணவ மாணவிகள் புதிதாக வேளான் செய்ய விரும்புவோர் எளிதில் புரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும்
இயற்கையில் பல மூலிகைகள் முளைந்திருந்தன. அது போக, மருத்துவத்திற்குத் தேவையான பல மூலிகைகளைத் தேடித்தேடி வளர்த்திருக்கிறது . விஷத்திலேயே கொடிய விஷமான எட்டி, ஒத்தத் தலைவலியைக் குணப்படுத்தும் காஞ்சொறி, ஆஸ்துமாவை அழிக்கும் ஆஸ்துமா கொடி, சர்க்கரை நோயை குணப்படுத்தும் சர்க்கரைக் கொல்லி, இன்சுலின் செடிகளும் இங்கே இருக்கிறது. இந்த இன்சுலின் நாற்றுகளை நிறைய பண்ணைகளில் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என்று விற்கிறார்கள். ஒரு செடியை வாங்கிக் கொண்டு வந்து அது வளர்ந்ததும் தண்டை ஒடித்து வைத்தாலே போதும், தன்னால் வளர்ந்துவிடும்.
ஏறத்தாழ ஐநூறுக்கும் மேற்பட்ட மூலிகைகள் இங்கே இருக்கு. இந்த மூலிகைகளை வைத்து ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, புற்றுநோய், தோல் நோய் என்று ஆங்கில மருத்துவத்திற்கு சவால் விடும் எல்லா நோய்களையும் முழுவதுமாக குணப்படுத்த முடியும். இங்கிருக்கும் எந்தச்செடிக்கும் எந்த ஊட்டமும் கொடுப்பதில்லை. தன்னாலேயே வளர்கிறது. மூலிகையயோட குணமே அதுதான்.
உணவே மருந்து; மருந்தே உணவு என்பார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே, நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான மருந்தையும் சேர்த்து சமைத்தார்கள். மருந்துப் பொருள்களாக வகைப்படுத்தப்பட்ட பல மூலிகைகள், உணவுப் பொருள்களாகவும் நம் வீட்டு சமையலறைகளை ஆக்கிரமித்ததுண்டு. ஆனால் இன்றைய நிலை தலைகீழ்! மனிதர்களை நோய்களின் தொல்லையிலிருந்து காக்க பாட்டன் மருத்துவ முறையாகக் கருதப்படுவது 'சித்த மருத்துவம்'. தமிழ் முன்னோர்கள் அருளியதாகக் கருதப்படும் மருத்துவ முறை 'ஆயுர்வேதம்'
இவற்றின் கலவையாக உருவானதுதான் பாட்டி வைத்தியம் என்ற நம் பாரம்பரிய வைத்தியம். சாதாரணமான தலைவலி, உடல் வலி என்றாலே பலரும் நாடுவது ஆங்கில மருந்து மாத்திரைகளை. ஆனால் மேலைநாடுகளிலோ மக்கள் அதிகம் விரும்புவது மூலிகைப் பொருட்களாம்! அங்கே நம் சித்த, ஆயுர்வேத மருத்துவப் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறதாம். சில ஆங்கில மருந்துப் பொருட்களே, மூலிகைகளிலிருந்து வேதி முறைப்படி தயாரிக்கப்படுகின்றன. ஒன்றுமில்லாத பிரச்னைக்குக்கூட ஓராயிரம் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களை, மருந்து அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்.
இயற்கை வழி வேளாண்மை
↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
↣ மழை நீர் அறுவடை
↣ உயிர்வேலி
↣ ஒருங்கிணைந்த பண்ணை
↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
↣ களப்பயிற்சி
↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
↣ கால் நடை பராமரிப்பு
↣ நிலங்களை தேர்வு செய்தல், காடு வளர்ப்பு
↣ மரபு விளையாட்டு
ஆகியவை விவசாயிகள் பேராசிரியர் கொண்டு பயிற்சி வகுப்பு மேற்கொள்ளும் போது இதற்கான கல்வி அறிவு அனைவருக்கும் செல்லும் காலத்தாலும் அழியாமல் காக்கப்படும்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களாகட்டும், மர பொருட்களாகட்டும் வீட்டில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் உயிரற்ற பொருட்களுக்கே குறிப்பிட்ட கால இடைவேளையில் சர்வீஸ் எனப்படும் புதுப்பிக்கப்படும் பயிற்சி தேவைப்படுகிறது. அப்படி இருக்கையில் இந்த இயந்தரமான வாழ்க்கையில் ஏறக்குறைய நடமாடும் உயிருள்ள இயந்திரமாகிப் போன மனிதர்களுக்கு அவ்வப்போது மனதிற்கும், உடலிற்கும் புத்துணர்ச்சி பயிற்சிகள் தர ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கொண்டு இழந்ததை, தொலைத்ததை பசுமையை மீட்டெடுக்க முழுமையாக மாற்ற வேண்டும்..
வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளுக்கான இதழாகும். மகசூல், சிறப்பு கட்டுரை, நாட்டு நடப்பு, தொடர்கள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. வேளாண்மை சம்மந்தப்பட்ட துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு கட்டுரைகளும், வேளாண் வல்லுனர்களின் குறிப்புகளும் இணைக்கப்படுகின்றன.
கிராமப்புற வாழ்க்கை முறை தீவிரமாக பங்கேற்பதில் கிராம சுற்றுலா கவனம் செலுத்துகிறது. இது சுற்றுச்சூழல் சுற்றுலாவின் மாறுபாடாக இருக்கலாம். பல கிராம கிராமங்கள் சுற்றுலாவை எளிதாக்குகின்றன, ஏனெனில் பல கிராமவாசிகள் விருந்தோம்பல் மற்றும் பார்வையாளர்களை வரவேற்க ஆர்வமாக உள்ளனர் (மற்றும் சில சமயங்களில் கூட விருந்தினர்கள்). விவசாயம் மிகவும் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது, எனவே, குறைந்த கைமுறை உழைப்பு தேவைப்படுகிறது.
இந்த போக்கு சில கிராமங்களுக்கு பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக இளைஞர்கள் நகர்ப்புறங்களுக்கு செல்ல வழிவகுக்கிறது. இருப்பினும், நகர்ப்புற மக்களில் ஒரு பகுதியினர் கிராமப்புறங்களுக்குச் சென்று வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர். இயற்கையையும் கலாச்சாரத்தையும் அனுபவித்து நகர்ப்புறவாசிகள் கிராமப்புற கிராமத்தில் தங்கியிருக்கும் பயணத்தின் ஒரு வடிவம்.
பசுமை நூலகம் என்பது மனித வாழிடங்களின் தொகுப்புகளான கிராமம், நகரம், மாநகரம் என்னும் பரப்பில் இயங்கும் அனைவருக்கும் பொதுவான படிப்பகம். நிறுவன நூலகம் என்பது கல்வி நிறுவனங்கள், வேலை செய்யும் அலுவலகங்கள் முதலியவற்றில் பொதுவான, குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்களால் அமையும் நூலகம்.
பசுமை நூலகம் என்பது தான் சார்ந்த துறை ரீதியிலான நூல்களுடன் தன் உறுப்பினர் களுடன் (குறிப்பாக குழந்தைகளுக்குத்) தேவையான அறிமுகப் புத்தகங்களுடன் அமையும் நூலகம். இதில் நிறுவன நூலகம், வீட்டு நூலகங்களைவிட பொது நூலகங்கள் குடிமக்களின் கல்வித்தரத்தை மேம் படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.